(2082)
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
கர்மா:-
கர்மா என்றால் செயல். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. அது நல்ல செயலாக இருந்தால், நமக்கு நல்லவினை வந்துசேரும். தீய செயலாக இருந்தால், நமக்கு தீயவினை வந்துசேரும்.
ஒருவர் பல பிறவிகளில் செய்த மொத்த கர்மாக்கள் (நற்செயல்கள் மற்றும் தீயச்செயல்கள்) குவியல், சஞ்சித கர்மா என்று அழைக்கப்படுகின்றது. சஞ்சித கர்மா தான் நம்முடைய மொத்த கர்மா ஆகும்.
சஞ்சித கர்மாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் இப்போது நம்முடைய இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டும். நாம் இப்போது அனுபவிக்க வேண்டிய குறிப்பிட்ட அளவிலான கர்மா தான் பிராரப்த கர்மா என்றழைக்கப்படுகின்றது.
இப்போது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களுக்கு எதிர்காலத்தில் வினைகள் காத்துள்ளன. ஆகையால், இப்போது நாம் செய்யும் செயல்கள் ஆகமி கர்மா என்றழைக்கப்படுகின்றது.
ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.
ராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..
தங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா? என்பதுதான் சீதையின் சந்தேகம்..
ஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..
ராமர் "தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை" என்றார். மேலும் "உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்" என்று உவகையுடன் கூறினார்.
- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).திருமண் திருக்காப்பு வேற்றுமைகள் அனைத்தும் பாஞ்சராத்திர ஆகம சாஸ்திரங்களையே அடிப்படையாக கொண்டவை.
அப்படி இருந்தும் நம் சம்பிரதாயத்திற்கென்று ஒரு காப்பு, தங்கள் மதத்தாருக்கு ஒரு காப்பு,
தங்கள் மதத்தாருக்குள்ளேயே மடத்துக்கு ஒரு காப்பு, முனித்ரயத்திற்கு ஒரு காப்பு.
திருமலை திருவேங்கடவனுக்
கு ஒரு காப்பென்றால் திருவரங்கனுக்கு வேறொரு காப்பு.
இவ்வாறு இருக்க, நம் பூர்வர்களான ஆழ்வார்கள் விரும்பி அணிந்த திருக்காப்பாவது யாது?
“வண்பொன்னி பேராறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய்
தொண்டர் சேவடி செழுஞ்சேறு
என் சென்னிக்கு அணிவனே”
என்கிறார் குலசேகர பெருமாள் (பெருமாள் திருமொழி, 2-3).
எம்பெருமானின் அவதாரப் பெருமைகளை தினந்தோறும் வாயாரப் பாடி, மகிழ்ந்து, ஆநந்தக் கண்ணீரால் எம்பெருமானின் சந்நிதி திருமுற்றத்தை சேறாக்குகிற பாகவதர்களின் திருவடி பட்ட சேற்றை என் நெற்றிக்கு காப்பாக அணிவேன் என்கிறார் குலசேகராழ்வார்.
அதாவது, ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது நெற்றிக்கு தோஷம்தீர மங்களார்த்தமான திலகமாய் கொள்வேன் என்கிறார்.
இங்கே கண்ணநீர் என்பது எம்பெருமானின் நீர்மையை நினைத்து கண்கள் அசும்பொழுக வரும் ஆனந்தக் கண்ணீரைக் குறிக்கிறது. இந்த கண்ணநீருக்கு வெள்ளப்பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை உவமையாக கொள்கிறார் ஆழ்வார்.
இந்த பாசுரத்தின் தேறிய கருத்து யாதெனில், திருமண் காப்பைப் போன்ற புறச் சின்னங்களை காட்டிலும் பாகவத சேஷத்வத்தில் நிலைநிற்கும் நெஞ்சமே ஒரு ஸ்ரீவைஷ்ணவ அதிகாரிக்கு லக்ஷணம் என்கிறார் ஆழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக