தலையங்கம்

என்னருந் தமிழா,

 வாளொடு தோன்றிய நம் முதற்குடியில் எழுத்தாணி கொண்டு
கவிகள் செய்தநல் இலக்கியங்கள் பல. பாரதி, பாரதிதாசனோடு பின் வந்த
சீர்திருத்த கவிகளின் தமிழ் பணியும் அரும்பணியே! தற்காலத் தமிழில்
இக்கவிகள் போல் கவிபாடிட விழைவோர் பலர் இருப்பினும் அவர்கள் மீது இருள்  பரப்பப் பட்டுள்ளது


இவர்கள் உள்ளூர்ச் சிற்றிதழாளர் எனும் நிலைக்கு சுருங்க வைக்கப்
படுகிறார்கள். எதிலும் நன்மையுண்டு என்பதனால் இச்சிற்றிதழ்களே அருந்தமிழ் வளர்க்கும் பணியினைச் செய்து வருகின்றன. சிற்றிதழ்கள் எனச்
சொல்லிக்கொண்டு வெளிவந்த இதழ்கள் அன்னைத் தமிழை ஆய்ந்தறியும் பணியை விடுத்து அனைத்தும் அறிந்தவராக காட்சிப்படுத்திட  அந்நிய மொழியின் குப்பைகளை கூட மொழிபெயர்த்து புகழ்பாடி அதனை பரப்பிடும் பணியைச்செய்கின்றன.

இவைகள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற இலக்கியங்களில் உள்ள அறிய நுட்பங்களை ஆய்ந்தறிய மறுக்கின்றன. இச்சூழல் உடைந்திடவும் உள்ளூர் படைப்பாளிகளின் திறன்களுக்கு களம் அமைத்துத் தந்திடவும் அதில் புதிய இலக்கியங்கள் நற்றமிழில் விளைந்திடவும் இலக்கியத்தோடு சமூக அரசியல் சூழலை மக்களிடையே விழிப்பேற்படுத்திடவும் அச்சிட்ட ஏடுகளில் திங்களிதழாகவும் வலைதளம் வழியே மின்னிதழாகவும் அம்புகளை எய்த வரும் "சத்ரியன்" எனும் நவீன தமிழ் சிற்றிதழோடு தமிழ் பணி செய்திட வேண்டுகிறேன்
                 

                                                                                                                         - ஆசிரியர்

இதழ் முகவரி

சத்ரியன்
75, நடுக்களம்
வெள்ளையகவுண்டனூர்
சே.பாப்பாரப்பட்டி-அஞ்சல்
ஆட்டையாம்பட்டி
சேலம் - 637501

கருத்துகள் இல்லை: